எம் கிட்ஸ் – திருவள்ளுவர் தினம்
திருவள்ளுவர் தினத்தை நினைவுகூர்ந்து, எங்கள் எம் கிட்ஸ் இளம் மழலைகளுக்கு திருவள்ளுவரின் காலத்தால் அழியாத ஞானத்தை அறிமுகப்படுத்தும் வகையில் திருக்குறள் ஒப்புவிப்பு போட்டி நடத்தப்பட்டது.
மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும் தெளிவுடனும் ஒவ்வொரு குறளையும் பெருமையுடன் ஒப்புவித்து, தமிழ்மொழி மீது உள்ள பற்றுதலை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சி மூலம் அவர்கள் தமிழ்மொழியின் சிறப்பையும், திருக்குறளின் அருமையையும் உணர்ந்து, தமிழ்மொழியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
